21/11/2018

பதினேழாம் நூற்றாண்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...


ஓர் வரலாற்று நிகழ்வு...

கி பி பதினேழாம் நூற்றாண்டில் தென் பாண்டி நாடு என்று சொல்லக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் நடந்த சம்பவம் தான் நீங்கள் படிக்க இருக்கும் நிகழ்வு.

மேலே குறிப்பிட்ட இடத்தில் பிறந்தது ஒரு குழந்தை.

அதன் சிறு வயதில்  இலக்கிய ஆர்வமும் அறிவாற்றலையும் உணர்ந்த அந்த சிறுவனின் தந்தை, கடிகைமுத்து புலவர் என்று சொல்லக்கூடிய ஒரு தமிழ் புலவரிடம் பாடம் கற்க தமது பிள்ளையை அழைத்து சென்று படிக்கவிடுகிறார்.

கடிகைமுத்து புலவரும் அந்த சிறுவன் 16 வயது இளைஞன் ஆகும் வரை தமிழ் இலக்கியம் தமிழ் வரலாறு போன்றவைகளை படித்து மிகவும் திறமையானவ மாணவன் என்ற பெயரையும் வாங்குகிறார்.

இந்நிலையில் வட நாட்டில் இருந்து வந்த இன்னொரு புலவர் வாலை வாருதி என்ற பெயருடைய அறிஞர்.

இவர் வட மொழி பண்டிதர் என்று அழைக்கப்பட்டாலும் தமிழை கற்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் புலமை போட்டி பெற்று வென்று வந்தார்.

அதாவது அரசன் மந்திரிகள் பொது மக்கள் மத்தியில் இரண்டு புலவர்களுக்கும் போட்டி நடக்கும் கருத்துப்போர் என அக்காலத்தில் கூறுவார்கள்.

அப்படிப்பட்ட கருத்துப் போட்டியில் மிகவும் திறமையானவரான வாலை வாருதி என்ற புலவர் தமது ஊருக்கு வந்து தமது அரசன் முன் சொல்லுகிறார்..

இந்நாட்டில் எம்முடன் கருத்து வாதம் புரிய கடிகைமுத்து புலவரோ அல்லது அவரது மாணவர்களோ தயாரா என்று சவால் விட்டார்.

இதை கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர்.

அதை எதிர்கொள்ள தயார் என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறுகிறார்.

அவ்வளவுதான் கூட்டம் கூடியது தண்டோரா முழங்கியது.

அரசவையில் மாமன்னன் தலைமையிலான கருத்து யுத்தம் தயாரானது..

ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் வட மாநில பண்டிதரான வாலை வாருதி,  மந்திர தந்திரங்கள் செய்வினைகளை கற்றவர் என்றும் இந்த கலையில் பெரிதும் அனுபவம் உள்ளவர் என்றும்..

அதனால் தாம் போட்டி போடும் எதிர் புலவனை  மந்திரத்தால் துவம்சம் செய்து விடுவார் என்று ஏற்கனேவே கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர் போட்டிக்கு செல்ல சிறிது தயக்கம் காட்டுகிறார்.

இதே கவலையில் இருந்ததால் உடல் நலிவும் ஏற்படுகிறது.

இந்நிலையில் போட்டி ஏற்படும் நாள் வந்தது எழுந்து நிற்கவே முடியாத கடிகைமுத்து புலவரின் நிலையை உணர்ந்த  அவரது மாணவர் (மேலே பார்த்தோம் அல்லவா அவர் தான்).

எம் ஆசிரியர் உடல் நலம் சரியில்லை ஆகவே இந்த வட நாட்டு பண்டிதரை எதிர்க எம் ஆசிரியர் எம்மை போட்டியில் கலந்து கொள்ள கட்டளையிட்டுள்ளார்.

அரசன் அனுமதித்தால் இந்த வாலை வாருதி புலவருடன் நான் கருத்துயுத்தம் நடத்த தயார் என்று சபையினர் முன்பு கூறினார் கூச்சலும் குழப்பமும் மேலோங்க..

ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி உடனே ஆனையிட்டார்  (இவர் தான் எட்டையபுர மன்னர்)..

கடிகைமுத்து புலவர் செய்தால் அதில் அர்த்தம் இருக்கும் இந்த சிறுவனை வாலைவாருதி புலவரிடம் போட்டி இட ஆனையிடுகிறேன் என்றார்.

ஆம் கடிகைமுத்துவின் மானவரான இவருக்கு அப்போது வயது 16 இல் இருந்து 17 க்குள்.

சபை அமைதியானது போட்டி ஆரம்பம் ஆனது..

வாலைவாருதி அகத்தையோடு அவையோரை கேளிப்பார்வை  பார்த்து விட்டு, மளமளவென ஆரம்பித்தார் தன் பாடலை..

வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய் என முடித்தார்.

அதாவது தமது குருவான கடிகைமுத்துவை தாழ்த்தி பாடி இறுதியில் நான் யார் தெரியுமா சின்னப்பயளே என்று கேளிக்கையாக பாடினார்.

இதை கேட்டு கொண்டு இருந்த அந்த
16 வயது வாலிபர் ரத்தம் கொதிப்பேற கண்கள் சிவக்க ஆரம்பிக்கிறார்.

ஆரம்பிக்கும் முன்..

(நீங்க வாசிக்க போகும் கருத்து கவிதைக்கு அர்த்தம் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படியுங்கள் உங்களுக்கே புரியும்.

மிகவும் பண்டைய தமிழ் வார்த்தை அல்லவே இது.

கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அர்த்தம் விளங்கும்).

( எழுத்தின் அழகை உணர கொஞ்சம் கோபமாக படியுங்கள் காரணம் அவ்வளவு பெரும் சபையில் கோபம் கொப்பளிக்க வீர வசனம் போன்று பேசப்பட்டது இந்த கவிதை ஆகவே கொஞ்சம் கோபமாக படியுங்கள் ).

எழுத்தானியே பேசு
ஏ எழுத்தானியே பேசு

சமரதுரக துங்க மனருஞ் சபா சென்று சரிசமா சன மீதிலே

அமரவொரு நரகொம்பு தின முஞ்சு மாசொல்லும்.

அமுதகவி ராஜ னானே

திமிலபகை வரைவென்ற பருதி யெனும் யெமதெட்ட

தீரனணி வாயில் வித் வான்
உமறு குழ றீடிலண்ட முகடும்ப டீரென்றும்

உள்ளச்சம் வையும்
பிள்ளாய் யாமே.
புலவா உள்ளச்சம்
வையும் பிள்ளாய் யாமே.

என்று கோபம் கொப்பளிக்க பாடி முடித்தார் அவையோர்கள் அனைவரும் ஆச்சரியம் பொங்க அமைதியாய் இருந்தனர்..

வாலைவாருதி எழுந்தார் மன்னிப்பு கேட்டார்.

கடிகைமுத்து புலவரை இகழ்ந்து பேசியதற்கும் மன்னிப்பு கேட்டார், சபையோர் ஆரவாரத்துடன் அந்த சிறுவனை பாராட்டினர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி என்ற குறுநில அரசன் அந்த சிறுவனை பாராட்டி பரிசுகளை கொடுத்து கவுரவித்தார்..

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
தமது ஆசானான கடிகைமுத்து புலவரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னாளில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி அரசவையில் அரசவை புலவராகவும் ஆக்கினார் அச்சிறுவனை.

யார் தெரியுமா இந்த சிறுவன் ?

சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.