கட்சி தொண்டர்களாக, ரசிகர்களாக, ஒருபோதும் செல்லாதீர்கள்..
அப்படி செல்வீர்கள் என்றால், நீங்கள் உங்களை நிலைநிறுத்தி கொள்வதற்காக தான் செல்கிறீர்கள் என்று அர்த்தம்..
ஏனெனில் மனித மனம் அனுதாபமும், உதவியும் தேவைப்படுகிற இடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளவே விரும்பும்..
( தாங்க முடியல சிலரின் பதிவுகள், என் கட்சி அந்த உதவிகளை செய்தது, என் மதத்தை சார்ந்தவர்கள் அந்த உதவியை செய்தார்கள் என்று.. இதுல அவங்க தன்னை மக்கள் கிட்டே அடையாளப்படுத்தி கொள்ள டீ-சர்ட் வேற, எதற்குடா இந்த பொழப்பு )...
சாப்பாடு பார்சலில் தன் நடிகனின் போட்டோவை வைத்த அந்த ரசிகர்களுக்கும், உங்களுக்கும் என்னட வித்தியாசம்..
உதவி செய்கிற இடத்தில் மனிதனாக போங்கடா..
உடனே நீ என்ன புடுங்குன என்று என்னிடம் கேட்காதீர்கள்..
புடுங்கிட்டு தான் இருக்கோம்..
நீ புடுங்குவது மக்களிடம் உன்னை நிலை நிறுத்திக்கொள்ள, நான் புடுங்குவது என்னால் சிலர் தங்களின் வாழ்வை நிலைநிறுத்தி கொள்வதற்காக..
இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.