30/11/2018

SHEL எண்ணெய் நிறுவனம் செய்த படுகொலை.. மறைக்கப்பட்ட கொடூர வரலாறு...


5 இலட்சம் விவாசிகளின் உயிரை குடித்த ஒரு நிறுவனத்தின் மரண போராட்ட பதிவு ..

இப்பதிவு அந்நிய நாட்டில் என்று யோசித்தாலும் நாளை நமக்கும் இதான் நிலை. பதிவின் இறுதியில் இது புரியும்..

நைஜீரியாவில் கறுப்பர்கள் என்பதை தாண்டி என்னை வளம் என்ற ஒரு விஷயம் உள்ளது.

இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதும் இல்லை எந்த ஊடகமும் இதை பற்றிய செய்தியை வெளியிடவும் இல்லை.

காரணம் அவர்களுக்கு தான் தெரியும்.. நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான பெரிய நாடு தொழில் வளம் என்பதை தாண்டி பாரம்பரியமும் இங்குள்ளவர்களுக்கு உண்டு.

நைஜீரியாவில் என்னை வளம் என்பது எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளை போன்று இங்கும் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கின்றது.

போன நூற்றாண்டு வரைகும் எண்ணைக்காக உலக முதலாளித்துவ நாடுகள் பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

நமக்கு ஷெல் [SHELL] என்ற  பெட்ரோலியம் நிறுவனம் பற்றி நமக்கு தெரியும் தானே..

இந்தியாவில் கூட ஆங்காங்கே இந்த நிறுவனங்களை நீங்கள் பார்க்கலாம்..

இந்த ஷெல் நிறுவனம் நெதர்லாந்தின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது இதில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு..

உலக பொருளாதாரத்தை இவனுக
சுரண்டுவதற்கு ஒரு பெயர் அது தான் SHELL..

பெட்ரோலிய நிறுவனம் என்று சொல்லி கொண்டு நைஜீரியாவில் உள்ள அமைச்சர்கள் ஆட்சியாளர்களை கையில் போட்டு கொண்டு அடிக்கும் கூத்துக்கள் ஏராளம் ...

எடுக்கும் எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தம் போடப்பட்டுக் கொண்டு கிட்டத்தட்ட 110 வருடங்களாக சுரண்டி கொண்டுள்ளது ..

இதன் பாதிப்பு எண்ணையை எடுக்க கூடிய நைஜீரிய நாடு தமது எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் கொடுத்துவிட்டு..

தமது தேவைக்கு அந்நிய நாட்டில் இருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறது..

[நம்பினால் நம்புங்கள் இதான் உண்மை]

இது நாள் வரைக்கும் இதான் நிலை நைஜீரியாவில்.

நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தமது சுரண்டலை சுரண்டி கொண்டு உள்ளது இந்த ஷெல் நிறுவனம்..

இதில் பங்குதாரராக பிரிட்டிஷுக்கு 40 % சதவீதமும் 60% அரச குடும்பத்திற்காகவும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக திருடி கொண்டுள்ளது.

இதை உணர்ந்த நைஜீரிய வாலிபர்கள் இதை தட்டி கேட்டால் புரட்சியாளன் என்ற முத்திரை குத்தி அவனை சிறையில் அடைப்பதாக இருந்தது..

பொறுத்துப் பார்த்த மக்கள் எண்ணெய் கடந்து செல்லும் குழாய்களை அடித்து நொறுக்கி தங்களது தேவைக்கு எடுத்து கொண்டனர் .

சில நேரங்களில் குழாய்களை சேதப்படுத்தி விட்டு அந்நிறுவனத்தின் ஆட்கள் வந்து சரி செய்ய வரும் வரை மறைந்து இருந்து..

ஷெல் நிறுவனத்தின் ஆட்களை சிறை பிடித்து அரசுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் பலமுறை எச்சரிக்கை செய்து விட்டார்கள் நைஜீரிய பொது மக்கள்..

இருப்பினும் பணத்தாசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனமான ஷெல்லும் இவனுக்கு வழியமைத்து கொடுக்கும்  உள்ளூர் ஆட்சியாளர்களும் மதிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை ..

இதன் உச்சக்கட்டம் என்னவாக இருந்தது தெரியுமா ?

SHEL நிறுவனத்தின் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்று கத்தி கூப்பாடு போட்டு இவர்களுக்கென்று தனியார் பாதுகாப்பு படை துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது ...

நினைத்து பாருங்கள் என் நாட்டை சுரண்டி விவசாயிகளின் உயிரை மாய்க்க வைத்து என் அரசுக்கு பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கி என் மக்களால் உனக்கு ஆபத்து என்று தனி இராணுவம் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு திராணி வந்து விட்டது என்றால் இதற்கெல்லாம் காரணமான நைஜீரிய மண் சார்ந்த நாங்கள் என்ன செய்வோம் ?

என்று பலரது கேள்வி ?

இந்நிலையில் தான் நைஜீரிய எழுத்தாளர் கென் சரோ விவா என்பவர் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்..

இவர் சுற்றுசூழல் ஆய்வாளர் கவிஞர் மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பழமை வாய்ந்த ஓகோனி பழங்குடி இன மக்களின் தலைவராகவும் இருந்தார்.

இவர் சுற்றுச் சூழல் சீர்கெட்டது என்றும்  எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன என்றும்..

இந்த ஷெல் நிறுவனத்தால் எண்ணெய் எடுக்கிறேன் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்ததால் கடந்த 100 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 இலட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் மாண்டனர் என்ற ஆய்வு உண்மையை உலகிற்கு போட்டு உடைத்தார்..

இனியும் சரிவராது என்று உணர்ந்த ஷெல் நிறுவனம் . நைஜீரிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து Ken Saro Wiwa மற்றும் இவரது கூட்டாளிகள் 8 அப்பாவி மக்களையும் 1995 வருடம் தூக்கிலிட்டது ..

இதோடு ஒரு நூற்றாண்டுக்கான போராட்டம் வெற்றியடையாமலே முடிந்தது....

இன்றுவரைக்கும் தொடர்ந்து தங்களது வயிற்றை நிரப்பி கொண்டு தான் உள்ளது..

ஒரு 100 வருடத்தில் 5.5 இலட்சம் விவசாயிகளை காவு வாங்கிக்கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி கொண்டுட்டு தான் இருக்கிறது இந்த SHEL நிறுவனம்....

நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று இதையெல்லாம் மக்களிடம் சொல்லவோ விவாதம் செய்யாவோ ஊடகங்களுக்கு நேரம் இருக்காது சமூக ஊடகங்கள் நமது கையில் உள்ளது .

நைஜீரிய மக்களது 100 வருட போராட்டம் தமிழகத்திற்கும் பொருந்தும்..

சிந்திப்பவர்கள் கிரகித்து கொள்ளட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.