பிரதமர் மோடி தான் பதவி ஏற்றதிலிருந்து அதிகமான சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக மக்களின் பணம் அதிகளவில் வீணக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., பினோய் விஸ்வம்,”மோடி எத்தனை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவருடன் எந்தெந்த அமைச்சர்கள் உடன் சென்றனர், அதற்காக எவ்வளவு ரூபாய் இதுவரை செலவாகியுள்ளது” எனநாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் பதிலளித்தார். அதில்,”2014 ஆம் ஆண்டு ஜீன் 15ஆம் தேதி முதல் 2018 டிசம்பர் 3ஆம் தேதி வரை 90 நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக 2 ஆயிரத்து 12 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாகவும்” கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.