நாம் பிறந்தது முதல் இன்றுவரை நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.
உதாரணமாக பத்து வருடங்களாக கார் ஓட்டிய அனுபவசாலியை ஹிப்னாடிசம் செய்து உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என அவர் ஆழ்மனத்தை குழப்பிவிட்டால், அவரால் நிச்சயமாக ஓட்டவே முடியாது.
அப்படியெனில் காரை ஓட்டுவது எது?
அவரின் ஆழ்மன தகவலா? அல்லது அவரின் உடலா?
அவரின் ஆழ்மனம் இத்தனை ஆண்டகளாக அவர் கார் ஓட்டும் போது செய்யும் சிறு தவறுகளை கூட கூர்ந்து கவனித்து தகவல்கள்களை சீர்செய்து அவரை ஆபத்தில் இருந்து புதிய உக்திகளை பயன்படுத்தி காப்பாற்றும்.
தீவிர பக்தி செய்கிறவனால் தான் கடவுளை உணர முடியும்.
எதை உன் ஆழ்மனம் முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கிறதோ, அதை உனக்கு காட்டும். அது உனக்கு கிடைக்கும். அதுவகவே நீ மாறுவாய்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவனை ஐந்தே நிமிடத்தில் வெறும் வார்த்தைகளால் காய்ச்சலில் படுக்க வைக்க முடியும்.
நம் வாழ்க்கை நம் எண்ணங்களாலும் பிறரின் கருத்தேற்றத்தாலுமே நகர்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.