கடந்த 2016ம் ஆண்டு உடுமலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர்-கவுசல்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
அதன்பிறகு சாதி மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சக்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது.
சங்கரின் ஊரான குமாரலிங்கத்தில் கவுசல்யாவிற்கு எதிராக சிலர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
அதில், கவுசல்யாவின் வீட்டில் வெளியாட்கள் யாரும் வந்து தங்க அனுமதி அளிக்க கூடாது. சங்கரின் ரத்தம் காய்வதற்குள் கவுசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் ஊரில் கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சங்கரின் பெயரை வைத்து அரசியல் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயல் கவுசல்யா செயல்பட்டு வருகிறார். அது இனிமேல் தொடர கூடாது எனவும் தீமானம் போடப்பட்டுள்ளது.
ஆனால் தீர்மானத்திற்கும், சங்கரின் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து கிராமத்தினர் கூறும்போது, சங்கர் மரணதிற்கு பிறகு கவுசல்யா அவரது குடும்பத்தினரோடு மிகவும் அன்போடும், பாசத்தோடும் இருந்தது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்தது.
ஆனால் தற்போது அவர்களது வீட்டில் இரவு நேரத்தில் யார் யாரோ பெண்கள் வருகின்றனர். நல்லவர்கள் என்றால் அவர்கள் ஏன் இரவில் வர வேண்டும் என்கின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.