07/12/2018

மனிதனின் பரிணாமம்...


மொத்த பரிணாம வளர்ச்சியின் சுருக்கம்தான் ஓன்பது மாதத்தில் கருப்பையில் நடக்கிறது.

ஒருவர் ஒரு உயிருள்ள நுண்ணுயிராக ஆரம்பிக்கிறார் , அதுதான் முதல் புராதன செல்.

எப்படி ஒரு உயிருள்ள நுண்ணுயிர் கடல் தண்ணீரில் ஆரம்பிக்க வேண்டியுள்ளதோ, அதே போல் ஒருவர் அதே சூழ்நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

கடல் தண்ணீரில் இருக்கும் அதே இரசாயன நிலைகள்தான் கருப்பையும் கொண்டுள்ளது.

செல் நீச்சலடிக்கும் அந்த கருப்பை தண்ணீரில் , கடல் தண்ணீரில் உள்ள அதே கலவைதான் உள்ளது.

கருப்பையில் பரிணாம வளர்ச்சி மறுபடியும் ஆரம்பமாகிறது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் உள்ள பரிணாம வளர்ச்சி.

ஆனால் முழுவதும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெனில் செல்லுக்கு நினைவாற்றல் உள்ளது.  இல்லாவிட்டால் அதனால் வேலை செய்ய முடியாது. இது திரும்பவும் அதே முறைகளை கடந்து செல்லும். இதற்கான நேரம் குறைவாக இருக்கும்.

அந்த நண்ணுயிர் பல லட்ச வருடங்களை கடந்த பின்புதான் அதுவால் கடலிலிருந்து பூமிக்கு வர முடிந்தது.  இந்த செல் இந்த முட்டை செல் கருப்பைக்குள் ஒரு வாரத்திற்குள் கடந்து விடும்.

ஆனால் அந்த ஏழு நாட்களுக்கு அதே பல லட்ச வருடங்களை சுருக்கிய பரிணாம வளர்ச்சியும் அதன் நிலைகளும் இருக்கும். இந்த ஓன்பது மாதங்களும் சுருக்கிய பரிணாம வளர்ச்சியும் மேலும் செல்லில் உள்ளடங்கிய வழிமுறையின் தொகுப்பும் இருக்கிறது.

அதனால் ஒருவகையில் உங்கள் உடல் ஒரு மொத்த பரிணாம வளர்ச்சி. இது மிக சுருக்கிய சிறிய நிலையில் உடலுக்கு அதனுடைய தனிபட்ட நினைவாற்றல் இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.