சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால் தான் தாங்கள் கண்டு அறிந்த உண்மை சாராம்சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தெளிவாக கூறி வைத்தனர்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை கோட்பாடு கொண்டவர்கள் தான் சித்தர்கள்.
ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறிந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழுதியுள்ளனர்.
அதிலும் மனிதனை ஆறறிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை பகுத்தறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற பல வழி முறைகளை குறிப்பிட்டுள்ளனர்.
ஆரோக்கியம் என்பது மருந்து மாத்திரை களைக் கொண்டது மட்டு மல்ல.
மனம் தெளிவடைந்து, புத்தி நன்கு கூர்மையடைந்து, ஆழ்ந்த சிந்தனைகளோடு, அமைதியாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்கின்றனர்.
அமைதியும் ஆனந்தமும் கொண்ட வாழ்க்கை முறை ஆரோக்கியமாக அமையும்.
இந்த ஆரோக்கிய வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை சித்தர்கள் தெளிவாக வகுத்துரைத்துள்ளனர்.
அதில் தியான முறை, சரசு வாசமுறை, வாழ்க்கை நெறிமுறை போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சரசுவாசத்தின் மூலம் தான் உடலில் ஒடுங்கியிருக்கும் சூட்சமங்களை கண்டறிய முடியும்.
இந்த சரசுவாசப் பயிற்சி பற்றி வர்ம மருத்துவத்தில் அகத்தியர் தெள்ளத் தெளிவாக குறி ப்பிட்டுள்ளார்.
இது போல் அனைத்து சித்தர்களும் அவரவர் நிலையில் விளக்கமாக கூறியுள்ளனர்.
இருப்பினும் அகத்தியர் தன்னுடைய வர்ம பரிகார முறையில் குறிப்பிடும் முறைகள் மனித உடம் பில் உள்ள நாடி நரம்புகள் உயிர் மூச்சு ஒடுங்கும் இடங்கள், நரம்பு நிதானம், மனநிலை, மனிதனை ஆட்கொள்ளும் சக்தி இவைகளைப் பற்றி மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சரசுவாசத்தினால், உயிர்நிலை ஒடுங்கும் இடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி தெளிவு படுத்தினர்.
இவற்றில் மனிதன் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகள், இல்லற வாழ்க்கை முறை, ஞானிகள் வாழ்க்கை முறை , தாய் சேய் நலம் முதலான வாழ்க்கை முறைகளையும், அவற்றை எவ்வாறு நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அகத்தியர் ஞானவெட்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சரநிலை சுவாசம் தெரிந்த வர்களால்தான் நரம்பியல், எலும்பியல் துறைகளையும், அபூர்வ சிகிச்சை முறைகளையும் துல்லியமாக கண்டறிந்து செயல்படுத்தும் வர்ம மருத்துவர்களாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
சரநிலை சுவாசம், நரம்பு நிதானம் இவைகளை அறிந்த பின் தான் வர்ம விளக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதாவது சரப்பயிற்சி,
சரநிலை சுவாசம், உச்சந்தலை சுவா சம் சித்தர்களால் கையாளப்பட்டு வந்த மாபெரும் சக்தி வாய்ந்த உன்னதமான நிலையாகும். இந்த நிலையை அறிந்தவர்கள் மிகவும் சிறப்பாக வர்ம மருத்துவத்தை கையாளுவார்கள் என்பது சித்தர் களின் கூற்று.
இதைத்தான் சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்
- என்றார்கள்.
வர்ம மருத்துவர்கள் பொதுவாக பிரபஞ்ச சக்தியை உணர்ந்து தான் வர்ம மருத்துவத்தைக் கையாண்டு வந்துள்ளார்கள்.
பிரபஞ்சத்திற்கும், மனித உடலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.
மேலும் அகத்திய பெருமான், பிர பஞ்சத்தை அறிந்தவர்களே மனித உடலை அறிய முடியும்.
மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து அவற்றை சீராக்க முடியும் என்கிறார்.
பிரபஞ்ச சக்தி தான், மருத்துவ உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகும்.
இதனால் சித்தர்கள் பிரபஞ்ச சக்தி கொண்டு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்...
குறிப்பு : சில வழிமுறைகளை மேலோட்டமாக தான் சொல்ல முடியும்.. அவற்றை நீங்களாக புரிந்து கொண்டு உங்களுக்கென்று ஒரு தனி வழிமுறை கண்டு பிடித்து பயிற்சி செய்து வெற்றி பெறுங்கள்... அதுவே இறுதி வரை உங்களுக்கு நிலைக்கும்... இல்லை என்றால் சொல்லிக் கொடுப்பவர் முழுமையாக சொல்லிக் கொடுத்து வழி நடத்துபவராக இருக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.