01/01/2019

தமிழர்களை ஏமாற்றி அழிக்கும் இந்தியமும்.. திராவிடமும்...


ஒரு மாநிலத்தில் 30 %விழுக்காடு  காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே சொல்லப்ட்டிருந்தும் , தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது...

அதில் மேலும் கொடுமை.. மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும், கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது..

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது..

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு..

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது...

மொழி இழந்தோம்..
மானம் இழந்தோம்..
அரசியல் அறிவை இழந்தோம்..
நிலம் இழந்தோம்..
காடு மலை இழந்தோம்..
இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு..

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ, அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும்..

அனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி..

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அறையல்வாதிகளுக்கு வேண்டும்..

ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும்..

அனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு..

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம்.. குறைந்த பட்சம், மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ?

சிந்தியுங்கள்...

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..

இவை எல்லாம் மறந்து மானங்கெட்டு பாடுவோம் இந்தியனாய் ஜன கன மன என்று..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.