28/01/2019

தமிழை அமர்ந்து திட்டும் ஆரியம்... தமிழை நின்று திட்டும் திராவிடம்...


சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் அவமதித்து விட்டார் என்று திராவிடர்கள் கூக்குரலிடுகிறார்கள்.

பெரியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்பார் என்று சொல்லும் திராவிடர்கள், அவர் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடலுக்கு எதிராக பேசியதை மூடி மறைக்கிறார்கள்.

தமிழருக்கு ஆரியம் வெளிப்பகை என்றால்,  திராவிடம் உட்பகையாகும்.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து முதுகு பின்னால் ஒளிந்து  கொண்டு ஆண்டாள் மீதான வன்மைத்தை வெளிப்படுத்தியவர்கள் பெரியாரிஸ்டுகள். அது மட்டுமல்ல, குல்லுக பட்டர் இராசாசி என்று திட்டிக் கொண்டே அவரை இந்துமதத்தின் பாதுகாவலராக சித்தரித்தவர்கள் பெரியாரிஸ்டுகள்.

(ஆண்டாள் கற்பனை கதை என்று இராசாசி கூறியது).

இப்போது தமிழின் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு சங்கராச்சாரியை திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் இராசாசி கிடைக்க மாட்டார். பெரியார் தான் கிடைப்பார். அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்தவர்கள் பட்டியலில் சங்கராச்சாரியையும், பெரியாரையும் குறிப்பிட்டேன்.

மேலும் சிலர் கேட்கிறார்கள். இப்போது பெரியாரை விமர்சிக்கலாமா? என்று.
இந்தக் கேள்வியை கேள்வி எழுப்புபவர்கள் ஆண்டாளை கொச்சைப் படுத்தி பெரியாரிஸ்டுகள் எழுதும் போதும், பேசும்போதும்  எங்கே போனார்கள்?

ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் குருதி ஓட்டமாகும். இதை திராவிடர்களிடமிருந்து கற்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை.

அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்...

தமிழை அமர்ந்து திட்டும் ஆரியம்...
தமிழை நின்று திட்டும் திராவிடம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.