மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்ட இன்று காலை 11.50 மணிக்கு மண்டேலா நகரில் அமைந்துள்ள விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி.
விழாவில் ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், நாடாளுமன்ற துணை சபாநாயகர், மத்திய-மாநில அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தனது அரசு சுகாதாரத் துறையில் செய்துவரும் சாதனைகளை பேசி முடித்து, தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பொதுவாக அரசு விழா துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபு.
நாட்டின் உயரிய பதவியிலிருப்பவர்கள் பங்கேற்ற நிகழ்வில் இந்த மரபு கடைபிடிக்க படாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.