02/01/2019

இசைக் கருவி கடம்...


கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும்.

இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி. இது ஒரு பெரிய மண் பானையாகும்.

கட இசைக்கலைஞர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.

கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.

வாய்ப்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும், நடைபெறும், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்து தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.