25/01/2019

கர்மா...


ஒருவன் பிறக்கும் போதே பணக்காரனாகவும் ஏழையாகவும் ஆரோக்கியமாகவும் நோய்வாய்பட்டும் பிறக்க காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த பதில் ஒன்றே ஒன்று தான்.

அது தான் கர்மா...

கர்மா என்பது நாம் எடுத்த முதல் பிறவியில் இருந்து நம் சித்தத்தில் பதிந்த விடயங்கள் ஆகும்.

இயற்கைத் தான் சேர்த்து வைத்துள்ள மொத்த அறிவையும் பயன்படுத்தி மிக மிக எளிய வழியில் சம்பவங்களை நிகழ்த்துகிறது.

உதாரணமாக இன்று ஒருவனுக்கு விபத்து நேர வேண்டும் எனில் அந்த சூழலை முன்னமே அறிந்த இயற்கை திடீரென அவன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கும்.

எப்படி எனில் வேறு வேலைகளில் அவன் ஈடுபட்டிருந்தாலும் திடீரென வண்டியில் அங்கே சென்று அந்த வேலையை முடித்து வருவோம் என தோன்றும்.
உடனே இவனும் கிளம்பி போய் வாகனத்தில் அரைபட்டு மால்வான்.

இவனுக்காக அந்த சூழல் உருவாக்கப் படாவிட்டாலும் இவனை அதனுடன் எளிமையான சிந்தனையில் மூலம் தொடர்புபடுத்தி விடுகிறது.

நம் மனம் இரண்டு விதமாக இயங்குகிறது..

ஒன்று நாமாக மனதினை இயக்கி செயல்படுத்துவது. இது சங்கற்பம் எனப்படும்.

மற்றொன்று தாமாக இயங்கும் மனதை கண்கானிப்பது. இது விகற்பம் எனப்படும்.

இதில் இரண்டாவது வகையான விகற்பத்தின் ஊடே தான் நம் கர்மா செயற்படுகிறது.

இதனை நிறைவேற்றுவது கிரகங்கள், தெய்வங்கள், ஆவிகள் மற்றும் பிறரின் வலுவான எண்ணங்கள் ஆகும்.

திடீரென உதிக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கர்மாவால் அலைக்கழிக்கப் படுகிறான்.

மனம் செயல்படாத ஒருவனை கர்மாவால் எதுவும் செய்ய இயலாது.

உதாரணம் கோமா நிலையில் இருப்பவன்.

அதே போல் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனையும. கர்மா தீண்டாது.

உனக்கு நடக்கும் ஒவ்வொரு செயலும் உன் மன எண்ணங்கள் மூலமே நடக்கிறது. எந்த ஒரு செயலும் முதலில் மனதில் தான் நடக்கிறது. பிறகு தான் ஸ்தூல உலகில் அது செயல்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.