25/01/2019

தமிழைப் பழித்த கன்னட ஈ.வெ.ரா...


யாராவது தேசியம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக பேசி அவர்களை கடுப்படிப்பது என்பது மட்டுமே ஒருவரது வேலையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

யார் எதைச் சொன்னாலும் அதற்கு எதிராகவும் குதர்க்கமாகவும் பேசி அவர்கள் மனம் கோனுவதை பார்த்து ரசிப்பது ஒரு வித சைக்கோ பழக்கம்.

அத்தகைய பழக்கம் கொண்ட ஒருவர், தமிழகத்தில் தமிழை வளர்க்க வேண்டும் என பலரும் சொல்லும் போது இல்லை தமிழை விட்டொழியுங்கள், ஆங்கிலத்தை வீட்டு மொழி ஆக்குங்கள் என்று ஏறுக்கு மாறாக முழங்கி தாய்மொழியாம் தமிழை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரம் தாழ்த்திப் பேசி தமிழர்களை கடுப்பேற்றி அதனால் மிகுந்த சந்தோஷம் கொண்டார். அத்தகைய குரூர குணம் கொண்டவர் யார் என்று கேட்கத் தோன்றுகிறதா?

அட, வேறுயாராக இருக்கமுடியும் – கன்னட ஈ.வெ ராமசாமி நாயக்கரைத் தவிர.

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அதை பேசும் தமிழனுமொரு காட்டுமிரான்டி என்று அவர் சொன்னதாகச் சொல்லுவார்கள். சரி தமிழை தரம் தாழ்த்தி அவர் வேறென்ன சொன்னார் என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போன்றது தமிழ், எனினும் அந்த தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இல்லை. தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும் போது அந்தப்பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக இருக்குமா?

தாய்ப்பாலை அதாவது தமிழை எதற்காக படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்கு பயன்படுகிறது?

உலக ஞானத்தில் முற்போக்கு தன்மையில் தமிழுக்கு எந்த சிறப்பும் இல்லை.

தமிழனுக்கு தெளிவான நேரான சரித்திரம் எதுவும் இல்லை.

மனித வாழ்வுக்கு மொழி முக்கியம் என்றால் உலகில் மற்ற நாடுகளைக் காணும் போது தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழி என்ன பயனை அளித்திருக்கிறது?

ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் வந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்..

மேற்கண்ட கூற்றுக்கள் யாவும் ஈவெரா வின் அறிக்கை மற்றும் கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன. ம பொ சிவஞானம் அவர்கள் அக்காலத்தில் ஈவெராவின் இது போன்ற தமிழுக்கெதிரான மற்றும் ஆங்கில ஆதரவுக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்பதை "தாய்ப்பால் பைத்தியம் - ஈ வே ரா கண்டு பிடிப்பும் ம பொ சி மறுப்பும்" என்கிற சிறிய நூலில் பா. குறிஞ்சிக்குமரன் தொகுத்தளித்திருக்கிறார்.

தமிழ், தமிழன் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் முற்போக்கு வியாதிகளும் ஈவெரா அடிபொடிகளும் தமிழுக்கெதிராகவும் தமிழை அவமதித்தும் ஈவேரா பேசியதை மறைத்தே வருகின்றன.

தமிழின் அருமை என்னவென்று கொஞ்சமும் தெரியாத கன்னடரான ஈவேரா தமிழ் மொழியில் சத்தில்லை அதனால் தமிழ் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்றெல்லாம் தன்னால் ஆனவரை தமிழை உமிழ்ந்திருக்கிறார். ஆனால் சூடு சுரனை இல்லாத இன்றைய முற்போக்கு சிந்தனை பேசும் டமில் ஒணர்வாளர் கூட்டங்கள் ராமசாமி நாயக்கரையே தங்களது ஆதர்ஷ புருஷராக கொண்டாடி வருகின்றனர். ஆனால் அழிவின் விளிம்பில் இருந்த தமிழை அச்சு இயந்திரத்தில் ஏற்றி காப்பாற்றிய உவே சுவாமிநாத ஐயரை புறம் தள்ளுகின்றனர்.

இப்படி யாரை ஆதரிக்கிறோம் என்று விவஸ்தை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்ட கூட்டமாய் ஈவேராவை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை தெரிந்தேதான் தமிழ் காட்டுமிரான்டி மொழி என்றும் தமிழனை காடுமிரான்டி என்றும் ஈவேரா சான்றிதழ் கொடுத்திருப்பார் போல.

நாம் காட்டுமிரான்டியாக கன்னட ஈவேராவை போற்றி தமிழை வெறுக்க வேண்டுமா அல்லது சிந்திக்க தெரிந்த மனிதர்களாக உ வே சாமிநாத ஐயரைப் போற்றித் தமிழை வளர்க்க வேண்டுமா?

சிந்தியுங்கள் தமிழர்களே..
சிந்திக்கும் திறனிருந்தால்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.