உலகமக்கள் அனைவருக்கும் சென்னை என்றவுடன் நினைவிற்கு வருவது மெரினா தான்.சென்ற சனவரிக்கு 2017 முன்னர் எப்படியோ தெரியவில்லை! ஆனால் சனவரியில் நடந்த ஏறுதழுவலுக்கான போராட்டத்தின் பிறகு மெரினா என்றால் அறிந்திறாத உலக வாசிகள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம்.
ஆம். மெரினா என்பது இயற்கை நமக்கு தந்த சூழல் என்று கூறுவதைவிட நம் இளைய சமுதாயம் நமக்கு தந்த மன நிறைவை முன்னிறுத்திய ஒரு வரலாற்றுச் சின்னமாகவே தோன்றுகிறது.
இந்த மெரினா என்று பெயர் சூட்டப்பட்ட ஆசியாவின் இரண்டாவது நீளமான அழகான கடற்கரை 1880ம் ஆண்டுகளில் இருந்திருக்கவில்லை என்றால் நம்புவீர்களா.
நீங்கள் நம்புவதற்கான சான்றுகள் இதோ படியுங்கள்...
மெரினா கடற்கரை 1881 ம் ஆண்டு வரை இல்லை, அதற்கு முன் இது எல்லா கடற்கரைகளை போலவே இருந்துள்ளது. அதாவது சென்னை முதல் இராமேஸ்வரம் வரை கடற்கரை இருந்தாலும் சுற்றுலா தளமாக மக்கள் வந்து போக ஏதுவான இடமாக ஒரு சில கடற்கரைகளே உள்ளது அல்லவா! அப்படியே மெரினாவும் வெறும் கடலும் கடல் சார்ந்த காடுகளாகவும் மட்டும், 1881 வரை இருந்துள்ளது. ஆனால் சுமார் 150 ஆண்டுகளாக மெரினா கடற்கரை ஒட்டியுள்ள துறைமுகம் இருந்துள்ளது.
இன்று நாம் காணும் மெரினா என்கிற 13.கி.மீ. நீண்ட நெடும் கடற்கரை உருவாக காரணமாக இருந்தவர் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 1881ல் மதராசு கவர்னராக அதிகாரத்தில் இருந்த சர்.மவுண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் கிரான் டஃப். இந்த கடற்கரைக்கு மெரினா என்ற பெயரை சூடியவரும் இவர் தான்.
வெறும் கடலும் காடுமாக இருந்த மெரினா கடற்கரை 13கி.மீ. நீண்டு விரிந்து கொள்ள தேவைப்பட்ட காலம் வெறும் ஒரு ஆண்டு தான். காடுகளை திருத்தி, மணல்திட்டுகளை சமன் செய்து, மணலை சலித்து குழிகளை நிரப்பி ஒரு வருட காலம் கடின உழைப்பால் உருவானது தான் இந்த மெரினா கடற்கரை. இதே மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர்கள் சிலை அமைந்தது ஒரு வரலாற்று பொருத்தம் என்றே எண்ண வைக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரியில் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங் வெறும் செங்கல் மணல் மட்டும் இல்லை எங்களோட இரத்தம் கூட சேர்ந்திருக்குடா என்ற பாடப்பட்டு இருக்கும். இனி அந்த வரிகளில் நாம் மெரினா கடற்கரையும் எங்கள் முன்னோர்களின் இரத்தத்தில் தான் உருவானது என்று தான் சொல்ல வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.