அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் இருவர், (வேலுமணி & தங்கமணி?) டில்லிக்கு ரகசியமாக வந்தனர்.
கூட்டணி குறித்த இழுபறிக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இவர்களுக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்திருந்தது.
இதுபோன்ற விஷயங்களுக்காக வரும்போது, டில்லி, தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதை, இவர்கள் தவிர்ப்பது வழக்கம்.
ஒடிசாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் இருவரும் டில்லி வந்து, அன்று மாலையே சென்னை திரும்பினர்.
தமிழக விவகாரத்தை கையாளும், டில்லி மேலிடத்துடன் பேசிய இவர்கள், கூட்டணி குறித்து, மீண்டும் உறுதிமொழியை அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்த சந்திப்பிலேயே, சில முக்கியமான விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
பா.ஜ., 12 தொகுதிகள் கேட்டதாகவும், 8 வரை தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில், 9 அல்லது 10 ஆக உயர வாய்ப்புள்ளது.
பா.ஜ., மேலிட வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்திய அதே வேளையில் தான், தம்பிதுரை திடீரென, டில்லியை விட்டு கிளம்பினார்.
பட்ஜெட்டை புறக்கணித்து, புறப்பட்டுச் செல்லும் அளவுக்கு அவருக்கு என்ன முக்கிய அலுவல்?
தம்பிதுரை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு சென்றதாக தகவல் வரவே, குழப்பம் மேலும் அதிகரித்தது.
பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையின், பட்ஜெட் புறக்கணிப்புக்கும், டில்லியில் அரங்கேறிய ரகசிய பேச்சுக்கும் தொடர்பு உண்டா?
ஜனாதிபதி உரை மற்றும் பட்ஜெட் மீதான உரை ஆகியவற்றில், ஒவ்வொரு கட்சியும், பங்கெடுத்துப் பேசுவது வழக்கம்.
இதில், அ.தி.மு.க., சார்பாக, வழக்கமாக பேசும், எம்.பி.,க்ககளின் பெயர்கள் தரப்படவில்லை.
'பட்ஜெட் மீதான உரையை, வேறு யாரும் பேச வேண்டாம்; நானே பேசுகிறேன்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடம், தம்பிதுரை கறாராக கூறிவிட்டார்..
தம்பிதுரை காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற வதந்தியும் சிறகடித்துப் பறக்கிறது.
அதிமுக பா.ஜ.,கூட்டணிப் பேச்சு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் வேளையில், அதற்கு எதிர்ப்பான நடவடிக்கைகளும், அ.தி.மு.க.,வில் வேகம் பெறுகின்றன.
இதனால் இறுதி முடிவை எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியும் உச்ச கட்டத்தை எட்டிஉள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.