09/02/2019

சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட ராமசந்திரய்யாவும் 95 வயதான அவரது அம்மாவும் வாழும் சூழலைக் கண்டு அவர்களுக்கு ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீட்டை கட்ட அஞ்சப்பள்ளி நாகமுல்லு தனது மகளின் நகைகளை அடமானம் வைத்தார்...


ஹைதராபாத் எல்பி நகரின் போக்குவரத்து காவலரான அஞ்சப்பள்ளி நாகமல்லு பலரது மனதை வென்றுள்ளார். தெலுங்கானாவின் சில்பகுண்டா பகுதியில் வகுதியில் மாற்றுத்திறனாளியான எம் ராமசந்திரய்யாவும் அவரது 95 வயது அம்மாவும் வசிப்பதற்காக, ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.

நாகமல்லு இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக தனது மகளின் நகைகளை அடமானம் வைத்து 64,000 ரூபாய் பெற்றுள்ளார்.

”என்னைப் பொறுத்தவரை தங்கம் என்பது அலமாரியில் கிடக்கும் ஒரு ஆடம்பரப் பொருள் மட்டுமே. ஒரு சில மாதங்களில் என்னால் அதைத் திரும்பப் பெறமுடியும். ஒருவருக்கு உதவி புரிவதன் மூலம் கிடைக்கும் மனதிருப்தியை இதுவரை நான் அனுபவித்ததில்லை. என்னுடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தனர். மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது என ’தி நியூஸ் மினிட்’-க்கு அவர் தெரிவித்தார்.

நாகமல்லு ஆஸ்பெட்டாஸ் ஷீட் வாங்குவதற்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தனது குடும்பத்தின் உதவியுடன் ஒரு படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டைக் கட்டினார்.

ராமசந்திரய்யாவின் நிலையையும் அவரது அம்மாவின் நிலையையும் குறித்து உள்ளூர் செய்தி சானல் ஒன்று ஒளிபரப்பியது. இதை அறிந்த பின்னர் நாகமுல்லு அவர்களுக்கு உதவ முன்வந்தார். முதலில் செய்தியாளரை தொடர்பு கொண்டு ராமசந்திரய்யாவின் இருப்பிடம் குறித்து தெரிந்துகொண்டார்.

ராமசந்திரய்யாவிற்கு சிறு வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டது. அவரது அம்மாவையும் அவரையும் பராமரிக்க யாரும் இல்லை. அடுத்தவரிடம் யாசித்து வாழ்ந்து வந்தனர். பருவமழை காலத்தில் இருந்து அதிகம் பாதிப்பிற்குள்ளாகி அவதிப்பட்டு வந்தனர்.

தி இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் இந்தப் போக்குவரத்து காவலர் கூறுகையில்,

”அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்டித் தர விரும்பினேன். ஆனால் அதற்கு செலவிடுவதற்கான பணம் என்னிடம் இல்லை. ஆனால் இந்தப் பணியை மேற்கொண்டே தீரவேண்டும் என்று முடிவு செய்தேன். என் மகளின் நகைகளை அடமானம் வைத்து கட்டுமானப் பணியைத் துவங்கினேன். என்னால் வெற்றிகரமாக பணியை நிறைவு செய்ய முடிந்தது. என்னுடைய சீனியர்கள் என்னை பெரிதும் ஊக்குவித்தனர். அவர்களது பிரச்சனைக்கு தீர்வுகாண பலர் ஆதரவளித்தனர். நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்யவேண்டும். ஒவ்வொரு சிறு முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றார்.

நாகமுல்லு ஏற்கெனவே பல்வேறு சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட பாடல்களுக்காக செய்திகளில் இடம்பெற்றுள்ளார். போலி செய்திகள், சாலை பாதுகாப்பு, ஓட்டு போடுவதன் அவசியம் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் அமைந்த அவரது பாடல்கள் சமூக வலைதளத்தில் வலம் வந்துள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.