09/02/2019

தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி...


தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்கள் காலை மேல தூக்குங்க.

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.

பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க.

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்கியதுபோல் வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 10 முறை இப்படி செய்யுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.