நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்கு தான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.
பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.
நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள், ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதை விட, எது தேவை இல்லையோ அதை பற்றி தான் யோசித்து கொண்டிருப்பதும், பேசி கொண்டிருப்பதும் தெரிய வரும்.
நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை.
அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது.
ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி , அது உங்களது எண்ணங்களை பெற்றுக் கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும்.
நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும்.
ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி.
நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.
அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது..
நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும் போது அது அப்படியே எடுத்து கொள்ளும்.
அதற்கு சில உதாரணம்...
நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன்.. நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன்..
இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது.. இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும்.. "
எனக்கு காய்ச்சல் வரகூடாது.. எனக்கு காய்ச்சல் வர வேண்டும்..
நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன்.. நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன்..
நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது.
மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்தது தான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.
நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் , நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும் , டிவி பார்த்து கொண்டிருக்கும் போதும், கார் ஓட்டும் போதும் , வேலை செய்து கொண்டிருக்கும் போதும்..
நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும் தான்.
ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும்..
அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்.
இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை..
நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும்.
நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.
உங்களது எண்ணங்கள் தான் விதை.
உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்து தான் இருக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.