900 சதுர அடி வீடு அதுவும் 1 லட்சம் ரூபாயில்..
மதிப்பிற்குரிய வானதியக்கா கவனத்திற்கு,
2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின்படி பிரதமர் மோடி தன்னிடம்
ரொக்க பணம் - 1,49,700 ரூபாய்
எஸ்பிஐ வங்கியின் காந்தி நகர் கிளையில் 1,33,496 ரூபாய்
அதே எஸ்பிஐ வங்கி கிளையில் பிக்சட் டெபாசிட் - 90 லட்ச ரூபாய்
எல்&டி இன்ப்ராஸ்டர்க்ச்சர் பாண்டு பத்திரத்தில் 2012-ம் ஆண்டு செய்த முதலீடு - 20,000 ரூபாய்
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு -3.9 லட்ச ரூபாய்
லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் - 1.5 லட்ச ரூபாய் முதலீடு
45 கிராம் தங்க மோதிரங்கள் - அதன் மதிப்பு 1.2 லட்ச ரூபாய்
மேலே கூறிய அனைத்து முதலீடு மற்றும் சொத்து போன்றவற்றைக் கணக்கிட்டால் சராசரியாக 1,00,13,403 ரூபாய் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காந்திநகரில் இவரது பெயரில் உள்ள வீட்டின் மொத்த அளவு 3531.45 சதர அடி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடத்தினை இவர் 2002-ம் ஆண்டு 1,30,488 ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் அதில் 2,47,208 ரூபாய் செலவு செய்து கட்டுமான பணிகள் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவற்றின் மதிப்புச் சராசரியாகத் தற்போதைய மதிப்பு 1 கோடி ரூபாய் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.2 கோடி ரூபாய் என பிரதமர் மோடி மார்ச் 21, 2017ல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் விபரங்களை வானதியக்கா படித்து பார்த்துவிட்டு மீம்ஸ் போட்டால் யாரிடமும் கலாய் வாங்காமல் தப்பிக்கலாம் என ஆலோசனை தருகிறேன்.
- நம்பிக்கை ராஜ்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.