27/04/2019

தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு - 1...


(பண்டைய வரலாறு அல்ல 40 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு) (மீள் பதிவு ) கட்டுரை பெரிதாக இருப்பதால் பொறுமையாக படியுங்கள் தமிழர்களே...

நாளை நிலத்தின் அடிப்படையில் தமிழர் நாட்டை பிரித்தால் தமிழர்களுக்கு கையளவு மண் கூட மிஞ்சாது .தமிழர் நிலம் திராவிடர்களால் இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .

தமிழின வரலாற்றில் மிக கொடுமையான காலம் என்று கணித்தால், அது ஆங்கிலேயனிடம் நாம் விடுதலை பெற்ற நாளாகத் தான் இருக்கும். ஒவ்வொரு இனத்தவரும் பெற்ற விடுதலையை தங்கள் மண், இனம், மொழி காக்க பயன் படுத்தி கொண்டனர்.

தமிழர் நாட்டின் பிரிவினையின் போது மட்டும் தமிழர்களின் தலைவர்களாக தங்களை காட்டி கொண்ட திராவிடர்கள், சதி செய்து அவரவர்கள் மாநிலத்திற்கு தேவையான தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து கொண்டனர். அதற்கு முதன்மையான காரணம் அவர்கள் தமிழர்களிடையே விதைத்த திராவிட உணர்வு,

தமிழர்கள் மட்டுமே, தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்த பூர்வீக நிலப் பகுதியை, திராவிடர்களுக்காக விட்டு கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலப்பகுதி 70,0000 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்போதுள்ள தமிழர் நாட்டின் நிலப்பரப்பில் முக்கால் பங்கு அளவு நிலத்தை நாம் விட்டு கொடுத்திருக்கிறோம். காரணம் நம்மிடையே ஊறி திளைத்த திராவிட உணர்வு,திராவிடத் தலைவர்கள்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் மகராஷ்டிரா முதலிலும், அடுத்து குஜராத், வலுவாக (தெலுங்கானா) ஆந்திரா, கர்நாடகா, கேரளா என நமது அண்டை மாநிலங்கள அனைத்தும், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்று போராடின .

ஆனால் தமிழர் நாட்டில் மட்டும் அது போன்ற போராட்டங்கள் நடை பெற வில்லை . காரணம் தமிழர்களின் தலைவர்களாக திராவிடர்கள் இருந்தனர். இவர்கள் தமிழன் என்ற உணர்வை மழுக்கடித்து, திராவிடர் என்ற உணர்வை ஊட்டியிருந்ததாலும், திராவிட நாடு கோரிக்கை யாலும் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

தமிழர்கள் என்ற போர்வையில் திராவிட மக்கள் வளமையான ஆதிக்க சக்தியாக இருந்ததாலும், தங்கள் வளமையான வாழ்வை காப்பாற்றி கொள்ள, நாம் திராவிடர்கள், இந்தியர்கள் என்று கூறி தமிழர்களை போராட விடாமல் தடுத்தனர்.

தென் இந்தியாவில் காலம் காலமாக தமிழர் நிலப்பகுதியில் வாழ்ந்து வந்த மலையாளிகள்,கன்னடர்கள், தெலுங்கர்கள், அந்த நிலப்பகுதியை தங்கள் மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று போராடினர்.ஆனால் தமிழர்கள் எந்த வித போராட்டமும் இல்லாமல் அமைதியாய் இருந்தனர். இந்தியாவே போராடியது ஆனால் தமிழகம் அமைதியாக இருந்தது .

கேரளா...

மொழி வாரி மாநில பிரிவினையில் தமிழர் பூர்வீக நிலப்பகுதியை அபகரித்து முதலில் வெற்றி பெற்றது மலையாளிகள். அகத்தீஸ்வரம், தோவானை , நொய்யாற்று பகுதி, நெடுமங்காடு , இடுக்கி மாவட்டத்தின் பெரும் பகுதி ,வண்டிப் பெரியாறு , தேவிகுளம், பீர்மேடு குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற பகுதிகள் எல்லாம், இனம், மொழி, வரலாற்று இலக்கிய ரீதியாக தமிழர் நாட்டோடு இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது நடக்கவில்லை மலையாளிகளின் திட்ட மிட்ட சூழ்ச்சியால் கேரளாவுடன் இணைந்தது. இது போதாதென்று, கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதி, நீலகிரி , கூடலூர், ஊட்டி பகுதிகளையும் மலையாளிகள் கேட்டனர். அப்போது மொழி வாரி மாநிலத்தை பிரிக்க நடுவண் அரசால் அமைக்கப்பட்ட பசல் அலி குழுவின் தலைவர் மலையாளியான பணிக்கர் என்பவர் மலையாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டார் .

அதை வெளிப்படையாக தெரிய்ம்படியும் மா. போ. சி இடம் நடந்து கொண்டார். அவரிடம் கடுமையாக வாதிட்ட மா போ சி , மற்றும் அவருக்கு துணையாக ஜீவா,நேசமணி போன்ற ஒரு சில தமிழ் தலைவர்களின் போராட்டத்தால் மட்டுமே மேற்கண்ட பகுதிகள் தப்பின.

காமராசரிடம் தேவிகுளம் பீர்மேடு பற்றி கேட்ட போது ,குளமாவது மேடாவது என்று கூறினார். அதற்கு காரணம் தமிழர் என்பதைவிட அவருக்கு இருந்த இந்திய உணர்வும், இங்கிருந்த திராவிடத் தலைவர்களும் மட்டுமே காரணம். திருவனந்த புரத்தில் தமிழர் பகுதிகளை கேரளாவிற்கு அளிக்கும் உடன்படிக்கையின் கூட்டம் நடை பெற்றது. அதில் தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த மலையாளியான வர்கீஸ் அவர்கள் எந்த வித வினாவும் எழுப்பாமல் தமிழர்களுக்கு எதிரான உடன்படிக்கையில் கையொப்பமிட்டார் .

தமிழ்க அரசின் செயலாளராக இருந்து நீங்கள் கையொப்பமிட்டது ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, விட்டு கொடுக்க வில்லை என்றால் மலையாள மக்கள் வருத்தப் படுவார்கள் என்று கூறினார் . ஆனால் அவர் கையோப்பமிட்டதற்கு காரணம், தான் ஒரு மலையாளி என்ற இனப்பற்றுதான் என்பது வெட்ட வெளிச்சமாக அன்றே தெரிந்தது .

அன்று 1500 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப் பகுதியை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் முல்லை பெரியாறு, பவானி , சிறுவாணி , கண்ணகி கோயில் உட்பட அணைத்து நீராதாரங்கள் நிலப்பரப்பும் தமிழர் நாட்டிற்கு உரியதாக இருக்கும்.

வஞ்சகம்...

மொழி வாரி மாநிலமாக கேரளா பிரிக்கப்படும் போது ,சிக்கலுக்கு உரிய நிலப் பகுதியில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியமல்ல. நிலம் யாருக்கு அதிகம் உரிமையாக (சொந்தமாக) உள்ளது என்பதை பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்ற முடிவை நடுவண் அரசு எடுத்தது . அன்று நடுவண் அரசில் ஆளுமை சக்தியாக இருந்தது இன்று போல அன்றும் மலையாளிகளே. அதன்படியே கேரள எல்லையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன..

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.