தாய் தந்தையே தன்னை கொடுமை படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சி பி சி ஐ டி ஆய்வாளர் விஜயலட்சுமி மகள் கேண்டி குற்றச்சாட்டு.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.
என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக உள்ளார். என்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பாரில் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன் . அப்போது கடந்து 23.04.2019 தேதி அன்று எனது தாயும் தந்தையும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமை படுத்தி இழுத்து சென்றதாகவும் இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் என்னுடைய அண்ணியிடம் 10 லட்சம் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இவை அனைத்தும் தன்னுடைய தாய் காவல் ஆய்வாளர் என்பதால் அவரை பற்றி எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அதனை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளமால் அவர் மீது நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர். இதனால் தன்னுடைய உயிர்க்கு ஆபத்து இருப்பதால் அவர்களிடம் இருந்து தன்னையும் தனது அண்ணனின் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.