வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது.
அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.
அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.
அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?
நான் பிறக்கும் போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.
அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன், என்று எண்ணுங்கள்.
இறந்த பிறகு என்ன நடக்கும்.?
இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.