10/04/2019

யாளி - சிறு குறிப்பு...


யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது.

யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது.

பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்...

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்...

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்...

(௧) சிம்ம யாளி (௨) மகர யாளி (௩) யானை யாளி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.