17/07/2020

விவசாய பயிர்களை அழிக்க முயன்ற போலீஸ்; பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிட்ட விவசாய தம்பதி - ராகுல் காந்தி கண்டனம்...



மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியைச் சேர்ந்த விவசாயியும் அவரது மனைவியும் விவசாய பயிர்களை அழிக்க முயன்ற காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் விவசாயம் செய்துவந்தார் ஏழை விவசாயி ராஜ்குமார் அகிர்வார். இது அரசுக்கு சொந்தமான நிலம் எனக் கூறப்படுகிறது. அங்கேயே குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். அந்த இடத்தில் ஒரு மாதிரி கல்லூரியை கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. அரசு நிலத்தை விட்டு வெளியேறுமாறு விவசாயிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர் நகரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததால் அந்த இடத்தில்  அடிக்கல் நாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்திற்கு அதிரடியாக வந்த காவல்துறையினர் ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு பயிர்களை அழித்து, விவசாயி குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். அதைக்கண்டு அதிர்ந்த பட்டியலின விவசாயி ராம்குமார், காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலே குடும்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டார்.

உடனடியாக விவசாயி குடும்பத்தினர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, ராஜ்குமார், அவரது மனைவி சபித்திரி மீது தற்கொலைக்கு முயன்றதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச போலீசாரின் இந்த நடவடிக்கையை  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் தனது கண்டணத்தை பதிவு செய்திருந்தார்...

https://twitter.com/RahulGandhi/status/1283611129730588672?s=19

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.