17/07/2020

பீகார் பாஜக கூட்டணி மெகா ஊழல்...



பீகாரில் கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சம்பாரனை இணைக்கும் புதிய பாலத்தின் பெரும்  பகுதி புதன்கிழமை பெய்த மழையால் சரிந்தது...

இந்தப் பாலத்தை 29 நாட்களுக்கு முன்பு மாநில முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைத்தார். கந்தக் ஆற்றில் 1.4 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள சத்தார் காட் மகாசேத்து பாலம் 2012 ஏப்ரல் மாதம் துவங்கிய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 16 அன்று பயணிகளுக்கு திறந்து விடப்பட்டது.

இது பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால்  ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டது.

கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சாம்பாரனுக்கும் இடையேயான ஒரே முக்கிய இணைப்பாக இருந்த இந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் கட்டும் பணியில் மகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.