30/07/2020

பாஜக அடிமை அதிமுக அரசின் சுயநலமே இந்த துயர சம்பவம்...



இது தற்கொலை என்றாலும் அரசு தான் கொலை செய்தது...

கொரோனா தொற்றுவின் காரணமாக ஊரடங்கை பிறப்பித்த தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன் ஏற்பாடு வழி வகை செய்ய வில்லையே..? யோசிக்க வில்லையே..?

ஊரடங்கை தளர்த்தி பல கட்டுப்பாடுகள் போட்டு மக்களின் வாழ்வாதாரம் எப்படி தான் உயரும்..? என்ன தான் செய்ய முடியும்..?

இது போன்ற பல கேள்விகள் எழுகிறது...

தமிழக அரசிடம் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கேள்விகளை கேட்கின்றோம்.

1.கொரோனா தொற்றுவிற்கு தமிழக அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன..?

2.கொரோனா தொற்று கணக்கை காட்டி மத்திய அரசிடம் நிதி பெற்றது எவ்வளவு அதனை பொது மக்களின் பார்வைக்கு காட்ட முடியுமா..?

3.மத்திய அரசிடம் இருந்து கொரோனா தொற்று ஒரு நபருக்கு பெறப்படும் நிவாரண தொகை எவ்வளவு..?

4.கொரோனா தொற்று ஏற்பட்ட நபருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்று பொது மக்களுக்கு அறிவிக்க முடியுமா..?

5.கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிப்பீர்கள்.? கண்டுபிடித்தால் எப்போது நடைமுறைக்கு வரும்.?

6.அடுத்த கட்டமாக ஊரடங்கு போட்டால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன வழி வகை செய்வீர்கள் அல்லது இதனை போல் பல பேரை கொலை செய்வீர்களா..?

இது போன்ற பல கேள்விகள் இருக்கின்றது. கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா தமிழக அரசால்..?

க.முஹம்மது சாதிக்
மாநில செயலாளர்
இந்திய தேசிய லீக் கட்சி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.