ஏன் காலத்தை பற்றி தெரிஞ்சுக்கனும்
நான் என்ன physictஆ என்று கேக்குறீங்களா ?
அப்படி இல்ல,
மாச சம்பளம் 2லட்சமா இருந்து அதுல 1.40 EMI or Expensiveனு செலவு பண்ணுனாலோ,
15,000 வாக்கிட்டு அதுல 1000ரூபாய் கூட சேமிக்க முடியலைனாலோ,
என்னைக்கோ விட்டு போன காதலன்/காதலி பற்றிய நினைவுகளையும் உணர்வுகளையும் மறக்கமுடியாம
தவிச்சுகிட்டு இருந்தாலோ,
இனிமே வாழ்க்கை/வாழ்க்கையில் எதுக்காக/எப்படி வாழனும்னு யோசிச்சாலோ..
நீங்க காலத்தை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்..
It's Not about Physics but It's About Life Process...
அறிவியல் சொல்லும் காலத்தின் இயல்பு என்பது மூன்று வகைகள்...
காலம் ஒரு வட்டம்.. ( இளைய தளபதி சொன்னது போல )..
{ நான்கு காரணங்களுக்காக : பிறப்பின் உருவாக்கம், பிறப்பு, வாழ்தல், இறப்பு }..
காலம் நெடுந்தூர பாதை போன்றது ( நேர்கோடு )..
{ காலத்தை கடக்க கடக்க வளர்ச்சி என்பது வருவதால் }...
காலம் என்பது குழப்பம்...
{ எதுவும் நம் கட்டுபாட்டில் இல்லாமல் தானாக இயங்குவதால் }...
வட்டம்...
நாம் காலத்தை வட்ட வடிவமாக எற்றுக்கொண்டால்... துறவியை போல வாழ்க்கை எந்த தொழில்நுட்ப அல்லது அறிவியல் ஈடுபாடுகளின்றி பிறப்பு இறப்பு என்ற வட்டத்திலே சுற்றுகிறோம் என்பதாகிறது..
அல்லது புதிய தேவைகள் இல்லாமல் இருப்பதை கொண்டே வாழ்வது...
நேர்கோடு...
காலத்தில் மறுமலர்ச்சி அல்லது Telescope வழியாக பார்த்தால் வட்டத்திலிருந்து பிரிந்து புதிய பாதையாக நெடுஞ்சாலையாகிறது.
இங்கு தான் மனுடம் காலமும் தொழில்நுட்பமும் ஒருசேர வளர்ச்சி கண்டது.
{ காலத்திற்கேற்ற அறிவியல் முன்னேற்றங்கள் }...
குழப்ப வடிவம்...
அறுதியிட்டு கூறமுடியாது கால வடிவம் { இயற்கை }..
காலத்தை வட்டமாகவோ நேர்கோட்டிலோ ஏற்றுக்கொள்வதால்..
ஒரே நிகழ்வை/உணர்வை - வேறு வேறு காலங்களில்.. வேறு வேறு பரிணாமங்களில் எதிர் கொள்வோம்..
ஆர்வமோ - சலிப்போ எல்லா காலகட்டத்திலும் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்.
எத்தனை புதிய காதலை தொடங்கும் போதும் முதல் காதலையும் அதன் இன்பங்களையும் காயங்களையும்
நினைவும் படுத்தும். ( இங்கு காதலும் அதன் உணர்வுகளும் )..
ஆனால் நம் ஆழ்மனம் விடுபட நினைப்பதெல்லாம் இந்த ஒப்பீட்டளவைத்தான்.
நாம் நேர்கோட்டிலோ/வட்டத்திலோ பின் செல்லவோ அல்லது ஓர் இடத்திலோ தேங்கியிருக்க விரும்புவதில்லை.
காலத்தை வட்டம்/நேர்கோடுகளாக பார்ப்பதால்..
வட்டம் ஆரம்பப்புள்ளியை வந்தடையும், நேர்கோடில் முன் சொல்லும், பின் சொல்லும் அதிலும் அதே நிகழ்வுகள் ஆனால் வேறு பரிணாமங்கள்.
சரி வட்டத்திலிருந்தும் நேர்கோட்டிலிருந்தும் விடுவட என்ன தான் வழி ?
அது காலத்தின் இயல்பை நான்காம் வகையாகக் கொள்ளதல்.
வெற்றியோ/தோல்வியோ அது சிறிதாகவோ/பெரிதாக வோ அல்லது நிலையுள்ள குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொள்ளாத கால வடிவத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதுவே சுருள் வடிவம், இதில் மேல சென்றாலும் தேக்கமின்றி விடுபட்டு மேல மேல என எழும்பவும்,தவறி கிழே விழுந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் நாம் சிக்கிக்கொள்வதில்லை, மாறாக தேக்கமின்றி உறுதியான பாதையையும் அதனை அடையும் பக்குவத்தையும் நமக்கு அளிக்கும்.
மேலும் நீண்ட பயணத்தை நம் இலக்காகவும் அதற்கு இடையில் எது வந்தாலும் அதனை கடந்து முன் செல்லவும் உதவும், ஒவ்வொரு முறையும் புது புது படிநிலைகளையும் அடையவும், திரும்பி பார்த்து திருத்திக் கொள்ள கால கண்ணாடியையும் கொண்டுள்ளது இந்த மதிப்புச்சுருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இந்த மதிப்புச்சுருள் ( Value Helix ) என்பதை இவர்கள் எங்கு காண்டார்கள்?
மனித மரபணு வடிவில் அதுவும் மதிப்புச்சுருள் வடிவம் கொண்டது அதனால் தான் தேக்கமின்றி மனிதன் பரிணாம வளர்ச்சியடைகிறான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.