19/08/2020

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லை: நீதிபதி காட்டம்...



விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுபோல் தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதித்துள்ளது.

பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இந்த தடையை நீக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இது தொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார். ராஜபாளையம் அருகே 32 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவும், ஊர்வலமும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு விதித்துள்ள தடையால் இந்த ஆண்டு விநாயர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தமுடியாத சூழல் இருப்பதாக கூறினார்.

21, 22ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் 25 பேருக்கு இலவச திருமணமும் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாட்டில் ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க முடியும்? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று கூறினர். மேலும் மனுதாரர் மனுவை திரும்பப் பெறாவிட்டால் அதிகமான அபராதம் விதித்து தள்ளுபடி செய்வதாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் உத்தரவை மீறி சிலைகளை அமைக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை உத்தரவிடக்கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.