ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பெண்கள் எலி வால் போன்ற கூந்தலையும், ஆண்கள் வழுக்கைத் தலையையும் பரிசாகப் பெறுகின்றனர்.
மேலும் தங்களது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பலர் கடைகளில் விற்கப்படும் பல மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.
ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம் என்பது தெரியுமா?
இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.
வழி 1 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.
வழி 2 - பூண்டு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வழி 3 - பூண்டுகளை சூரியக்கதிர்கள் படும்படி வைத்து நன்கு உலர்த்தி, பின் அதை அரைத்து பொடி செய்து, கண்டிஷனருடன் சேர்த்து கலந்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பூண்டு சாற்றினை கண்டிஷனருடன் கலந்து பயன்படுத்தலாம். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.
வழி 4 - ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
வழி 5 - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.
வழி 6 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தண்ணீர் மற்றும் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை இந்த கலவையை தலைக்கு பயன்படுத்தும் முன்னும் நன்கு குலுக்கி பின் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.