தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி ஆகும்..
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை.
இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்து வருவதே ஆகும்.
இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர்.
வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, ட்ரினாட் டொபகோ போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது.
அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறு மொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது.
பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்து விடவில்லை.
தவிர, தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர் இன்றும்
தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.
தவிர இது கூடிக் கொண்டே போகிறது.
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா? முடியாது தானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே.
வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்ட போதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
வந்துள்ளனர். இது அனைவரும் அறிந்த உண்மை.
அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் ஒரு சில விடயத்தில் அதிகாரம் பெற்று நிம்மதியாக வாழ்வர் என்பது உறுதி.
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 85% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.