05/08/2020

தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய கோரி மீனவர்கள் வலியுறுத்தல்...


தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மீனவர் கயாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 2020 மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியது. இந்த சட்ட விதி பாரம்பரிய மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை பாதிக்கக்கூடியது.

இவை நடைமுறைக்கு ஒத்துவராது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பாதிக்கக்கூடியது. எனவே இந்த மீன்பிடி தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மீனவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய முறையிலான மண்ணெண்ணெய் வழங்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதையும் அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.