இந்தியாவில் கலவரங்களை நடத்தும் நோக்கில், வெறுப்பு செய்திகளை பரப்புவதற்கு முகநூல் நிர்வாகிகள் திட்டமிட்டு சதி செய்வதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
முகநூலில் பதிவேற்றப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகள் தொடர்பாக விதிமுறையை முகநூல் நிறுவனம் வகுத்தது. அதன் படி முகநூலில் வெளியிடப்படும் வெறுப்பு கருத்துகளை தடை செய்யவேண்டும். ஆனால், இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு பொறுப்பு வகிக்கும் அன்கி தாஸ் எனும் பெண்மணி, "'இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பரப்ப உதவுவதாக'' அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிகை கூறியுள்ளது.
தமிழினப் படுகொலை குற்றவாளி ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான அன்கி தாஸ், சர்வதேச நிறுவனமான முகநூலின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு இயக்குநராக இருந்துக்கொண்டு இந்தியாவில் கலவரம் நடத்த திட்டமிடுவது மிகப்பெரிய தேசதுரோக செயல் ஆகும். இந்த குற்றத்தை விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.