தமிழனைத் திராவிடன் என்று திரித்துப் பேசிய ஈ.வெ.ரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் கூறியதை செவிமடுத்தாரா?
தலையினை மீட்டுத்தான் தலைநரைக் காக்கவேண்டும் என்ற தலைப்பிட்டுப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 1.5.47 தேதியிட்ட “தமிழ்முரசு” இதழில் எழுதினார்.
வேண்டுவது திராவிட நாடோ, இந்திய நாடோ அல்ல; தமிழ்நாடே என்று கூறி ஈ.வெ.ரா.வின் திராவிட நாடு என்ற திரிபுவாதத்தை மறுத்து அவர் கட்டுரை எழுதினார்.
அதன் முகமையான பகுதி இதோ..
”மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை.
தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கின்றோம்? “தமிழ்நாடு என்றால் “தமிழ்ஸ்தான்-பாகிஸ்தான்” என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்;
திராவிடநாடு”, “இந்தியநாடு” எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் மறுபுறம். ஆந்திரநாடு, கன்னடநாடு, கேரளநாடு எனப் பேசுவது போலத் தமிழர், “தமிழ்நாடு” என ஒருமுகமாகப் பேசக் காணோமே!
“தமிழா எழுந்திரு! எதிர்காலத் தமிழ்நாட்டினைப்பற்றி எண்ணத் தொடங்கு! தலையை அடகு வைத்தது போதும்! தலையை மீட்டுத் தலைநகரைக் காப்பாற்று!” (புதிய தமிழகம் படைத்த வரலாறு, பக்கம் 94.)
என்று தெளிவுபடத் தமிழ்நாடு மொழிவழியே அமைய வேண்டுமென தெ.பொ.மீ.அவர்கள் பதிவுசெய்துள்ளார்.
ஆனால், ஈ.வெ.ரா, “தமிழ்-தமிழர்-தமிழ்நாடு” என்பதைச் செவிமடுத்தாரா? இல்லையே! காரணம் அவர் தமிழர் அல்லர் என்பதே..
ஆகையால், ஈ.வெ.ரா. தமிழரின் இனப்பகையே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.