125 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியை தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் சதவீதம் சுமார் 41.03% என சொல்லப்படுகிறது. இதில் துளியும் உண்மையில்லை.
வடநாட்டில் சுமார் 50 வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்டு பேசும் மக்களையும் இந்திமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என அரசு சொல்கிறது.
இந்த மொழிகள் வட்டாரவழக்கில் பேசப்படும் மொழிகள் இல்லை, இந்த மொழிகளுக்கென தனித்தனி எழுத்து முறைகளை கொண்டு இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் யாரும் இந்தி எங்களுடைய தாய்மொழி என்று சொல்வதில்லை, அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.
இந்திய அளவில் 61.12% சதவீதம் பேர் இந்தியை பேசுவதாக இன்னொரு கணக்கு காட்டப்படுகிறது, இதுவும் உண்மையில்லை. அதாவது மேற்ச்சொன்ன 50 மொழிகளை பேசும் மக்கள் சுமார் 38.88% சதவீதம்.
இவர்கள் மக்கள் தொகையை இந்தி பேசும் மக்கள் தொகையுடன் சேர்த்து கணக்கு காட்டுகிறது நடுவண் அரசு. உண்மையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட சரியான மக்கள் தொகை சதவீதம் 24.51% ஆகும்.
நடுவண் அரசு இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 41 கோடி பேர் என கணக்கு சொல்கிறது.
இதன் மூலம் பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்ற மாயத்தை உருவாக்குகிறது நடுவண் அரசு என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது.
இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது.
ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள்.
இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது என்கிறார் இந்திய மொழிகள் கணக்கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி...
குறிப்பு : திமுக தான் இந்தி எதிர்ப்பாளர்கள் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.