"ரவுண்ட் அப்" களைக் கொல்லி கேன்சர் உருவாக்க தயாரிப்பு...
நாம் அனைவரும் விவசாயத்தில் களைச் செடிகளைக் கொல்ல பயன் படுத்தப்படும் ரசாயன களைக் கொல்லியின் தீமைகளைப் பற்றி அறிந்து இருப்போம்.
ஆனால் களைக் கொல்லிகளிலேயே கொடூரமானது மான்சான்டோவின் "ரவுண்ட் அப்" தான்.
நம் பட்டி தொட்டிகளில் கூட "ரவுண்ட் அப்" என்று விவசாயிகளிடம் கேட்டால் சாதரணமாக அதன் விளைவை பற்றி தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள்.
இந்த ரவுண்ட் அப் பில் கிளைபோசேட் Glydhosate எனும் கேன்சரை உற்பத்தி செய்யும் மிகக் கொடூரமான ரசாயனம் சேர்க்கப்படுகிறது என்பதை அறிவீர்களா என் விவசாய நண்பர்களே!!.
ரஙுண்ட் அப் பை அமெரிக்க நீதி மன்றமே "இது கேன்சர் ஊக்கிகளால் நிரம்பியது" என்று தீர்ப்பை வழங்கி உள்ளது உங்குக்கு தெரியுமா ?
இது மட்டும் அல்ல,
ரவுண்ட் அப் பை ஒரு மைக்ரோ மில்லி உட்கொண்டாலும் தேனீக்களின் இருதயத் துடிப்பு 80% குறைந்தே போய் விடுகிறது.
ரவுண்ட் அப் க்கு விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் பலியாவதும் இது போலதான்.
இளைஞர்களே உங்களுக்கு திடீர் ஹார்ட் அட்டாக் வந்து உங்கள் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்து போவது ஏன் என்று புரிகிறதா?.
உணவில் விஷம் கலக்கும் இந்த திட்டத்தை ஏதோ வெறும் விவசாயிகளின் பிரச்சனைதான் என்று எண்ணி விடாதீர்கள்.
இதையும் மீறி நம் நாட்டு சிறு விவசாயிகள் ரவுண்ட் அப் பை வாங்குவது இல்லை. தங்கள் குடும்பதோடு களைகளை பிடுங்கி விடுகிறார்கள்.
இதை தடுத்து களை பறிப்பதற்கு கூட ஆள் இல்லாமல் செய்வதற்காகதான் உங்களுக்காக சேவை எனும் பெயரில் உங்களை வதைக்க கடந்த அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.
இந்த திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த மூளை Jean Treze கிரீன் டிரீஸ் எனும் அழிப்பின் தொடர்ச்சிதான் இந்த அனைத்து மனித அழிப்பு செயல்.
அதைதான் பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ் Bacillus Thuringensis என்ற பாக்டீரியா கிருமியின் விஷ மரபணு பயிர்களின் மரபணுவிலேயே கலக்கப்படுகிறது.
இப்போது இந்தியாவில் பருத்தி 100% மரபியல் மாற்ற பருத்திதான். பருத்தி என்றால் உடுத்தும் துணிதானே. அது உணவு இல்லையே என்று வெகுளியாக நினைக்கும் குட்டீஸ்களாகவே உங்களை பழக்கி விட்டார்கள்.
1. மாடு எருமைகளுக்கு பால் அதிகம் சுரப்பதற்காக பாரம்பரியமாக நாம் பயன் படுத்துவது பருத்திக் கொட்டைதான்.
2. தற்போது வரும் பருத்தி எல்லாமே நம் பாரம்பரிய பருத்தி அல்ல. BT மரபியல் மாற்ற விதைதான்.
3. பாலிலும்,மாமிசத்திலும் இந்த BT மரபணு மாற்ற பருத்தி கலந்து விடுகிறது.
4. BT மரபியல் மாற்ற ரசாயன பருத்தி இலை தழைகளை ஆடு மாடுகளுக்கு உணவாக போடுகின்றனர்.
5. நாம் கடந்த 10 வருடங்களாக குடிக்கும்
பருத்திப் பால் மரபியல் மாற்ற BT பருத்தி விதை மட்டுமே!!.
இவற்றுக்கெல்லாம் மாற்று நெடுங்கால பயிராக மரம் போல் வளரும் நம் பாரத நாட்டின் பூர்வீக பருத்தியான பூனூல் பருத்தி எனப்படும் நாட்டு மரபணு பருத்திதான்.
இதன் பெயர் Gossypium arporeyum.
பருத்திக்கு அடுத்தபடியாக கத்திரி,கடுகு,அமெரிக்க வந்தேறி மக்கா சோளம்,நெல் என அனைத்திலும் BT யை நுழைத்து சட்ட விரோத சோதனைகள் நமது வரிப் பணத்திலேயே நம்மை வேரறுக்க கோவை மற்றும் கர்நாடகா தார்வாடு வேளாண் பல்கலைகழகங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
உங்களை அங்கும் இங்கும் ஓட விடாமல் தடுக்கவே மான்சான்டோவின் ரவுண்ட் அப்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.