23/09/2020

தியான இரகசியம்...

 


கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ , தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர்.

கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண் திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்..

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்.

கண் மூடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார் :

"குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே" - திருமந்திரம்.

கண் மூடி தியானம் செய்ய கற்று கொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரண குழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.