23/09/2020

முக்தியும் மனமும்...

 


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்.

இன்னும் சில உண்மைகளை நான் இங்கு சொன்னால் அது கசக்கும் என்பதால் வேண்டாம் என விட்டு விட்டேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.