ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்தைக் கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம்.
1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.
இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா? தூரமா? என்பதை அறியலாம்.
பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.
7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்..? அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்...
4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும் 9ஆம் பாவத்திலோ சூரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவு தந்தை ஊரில் அமையலாம்...
5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தம் ஆனால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பூர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.