21/09/2020

நியூட்டனின் F = MA என்ற விதியை தெளிவாக போதிக்கும் திருமூலர்...

 


அகார முதலா அனைத்துமாய் நிற்கும்

உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்

அகர வுகார மிரண்டு மறியல்

அகார உகார மிலிங்கம் தாமே.

- (திருமந்திரம்: 1753)

பொருள்:

அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும், உகரம் சத்தி என்றும் அறிந்தால், அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

அறிவியல்:

நியூட்டனின் F(Force) = M(Mass) * A(Acceleration) போதிப்பது யாதெனில் திடப்பொருளுடன் சக்தி சேரும் போது அங்குதான் இயக்கம் ஏற்படுகிறது என்பதாம்.

அதாவது ஒரு கல் ஒரு இடத்தில் அசையாதிருந்தால் அது வெறும் திடப்பொருள்தான் அந்த கல்லை ஒருவன் உருட்டி செல்கிறான் எனில் அங்கு உந்து சத்தி (Acceleration) ஏற்பட்டு கல்லானது இயக்கத்திற்கு உள்ளாகிறது.

இங்கே கல்லானது இயங்கும் திடப்பொருளாக உருமாறுகிறது.

இதைத்தான் திருமூலர் M(Mass) ஐ சிவமாகவும், A(Acceleration) சத்தியாகவும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சத்திதான் உயிர் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு பொருளின் இயக்கித்திற்கு தேவை சத்தி மட்டுமே..

சிவசத்தியின் கூட்டு சேர்கையே உயிரோட்டத்தின் அச்சானி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.