சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக சண்முகம் கடந்தாண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில், கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு பதவிக்காலத்தை 3 மாதங்கள் நீட்டிக்க மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வெளியாகின. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று (அக்.,14) வெளியான உத்தரவில், தலைமை செயலர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவரது பதவிக்காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.