12/10/2020

மூன்றாவது கண்...

 


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன் முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம்மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக் கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.