24/10/2020

நம் உணர்வுகளின் சக்தி...

 


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.