18/10/2020

இந்தியாவில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்...

 


இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும்.

இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்...

இந்தியாவின் இரண்டாம் பிரதம மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966 ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அரை நூற்றாண்டை கடந்த போதிலும், இன்று வரை அவர் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற பத்திரிகையாளர், சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவரின் மரணத்தின் போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.