இந்தியா முதற்கொண்டு தமிழகத்தில் கிருஸ்துவமும் இஸ்லாமும் பல கொள்ளைகள் அடித்ததாகவும் கொலைகள் செய்ததாகவும் நாம் படிக்கின்றோமே ?
மேலே படித்தது மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தின் தாக்கம் என்று வைத்துக் கொண்டாலும் மதன் எதை சார்ந்தவர் என்பதை சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமில்லை..
[இதற்கான தெளிவான பதில் பதிவின் இறுதியில்]..
கிருத்துவ மதத்தை சார்ந்த ஆங்கிலேயர்கள் நாட்டை பிடிக்கும் நோக்கில் வந்தார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அதே கிருத்துவ சமயத்தை சார்ந்த Constantine Joseph Beschi என்ற கிறிஸ்துவர் வீரமா முனிவர் என்று தமிழ் இலக்கணத்திற்கு தொண்டு செய்ததை மறுக்க முடியுமா ?
முகலாயர்கள் நாட்டை பிடிக்க வந்தார்கள் என்பது உண்மை அதே முகலாயா மன்னர்களில் மாவீரரின் ஷார்சா என்று சொல்லக்கூடிய முகலாலயன் இல்லையென்றால்...
இந்தியா சமநிலை படுத்தப்பட்ட நாடாக இருந்து இருக்காது.. காரணம் இந்த ஷார்சா என்பவன் தான் நேரடியாக அரசுக்கும் மக்களுக்குமான ஒப்பந்தத்தை நிகழ்த்தி காட்டினான்..
இன்றும் கூட இதற்கு ஆதாரம் உண்டு.
அன்றைய கால வீடுகளில் வீட்டின் ஓரத்தில் குழி தோண்டினால் ஒரு எல்லை கல் இருக்கும் இது தான் அவரின் சொத்து பங்கீடும் அளவை முறை.
மற்றும் இந்தியா பெரிய ஆட்சி செய்யும் நாடு என்பதால் எங்கோ உட்கார்ந்து கொண்டு தமிழக குக்கிராமங்களை ஆட்சி செய்வது சிரமம் என்று யோசித்து இஸ்லாமியரான ஷார்சா உருவாக்கியது தான் பஞ்சாயத்து என்பது..
பாஞ்ச என்றால் 5.. ஆயத்து என்றால் முடிக்கும் இடம் அல்லது முடியும் இடம்..
அதாவது 5 கிராமங்களின் எல்லையில் ஒரு பஞ்சாயத்து.
இந்த பஞ்சாயத்து மாவட்டத்திற்கு தொடர்பில் இருக்கும் மாவட்டம் அரசனின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாக இருக்கிறது.
இப்படி இவனால் உருவானது தான் பஞ்சாயத்து.
ஆனால் எத்துணையோ இன்னல்கள் இருந்தாலும் இந்த இரண்டு மதங்களும் இன்றும் இந்தியாவில் உள்ளது.
ஆனால் பிறப்பில் இந்தியா வா அல்லது மற்றைய நாடா என்ற சந்தேகம் இருந்தாலும் இறப்பு உத்திர பிரதேசத்தில் தான் இறந்தார் என்ற புத்தரின் புத்த மதம் எங்கே போனது ?
இந்தியாவின் முக்கிய கதாநாயகனான விளங்கும் அசோகர் யார் ? அவரது சின்னத்தை தான் இந்தியாவின் சின்னமாக அடையாளம் காண்கிறோமே இவரது வரலாற்றை புத்தமதத்தை அகற்றிவிட்டு பார்க்க முடியுமா ?
பண்டையகாலம் தொடக்கம் பதறி திட்டா நாக நாடு என்ற சொல்லெல்லாம் புத்த மதத்தின் அடிப்படையில் உருவானதே இப்பெயர்கள் எல்லாம் தமிழ் புராண இலக்கியத்தில் இருக்கிறதே..
இப்படி பட்ட ஒரு மதம் இந்தியாவில் பெரும்பான்மையாக இல்லையே ஏன் ? யார் இந்த மதத்தை ஒழித்தது ?
பதில் தெரியும்...
யாரும் அதை பற்றி பேச மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு அரசியல் செய்ய இஸ்லாமும் கிருத்துவமும் தான் வேண்டும்...
அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த வரலாறுகள் மறந்து விடுமா என்ன ?
நாகர்களின் கொடூர வரலாற்றை மறந்து விடுவோமா என்ன ?
இறுதியாக நான் மேலே சொன்னது போன்று மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது என்னடா இவனுங்க இப்படியா என்றே என்ன தோன்றும்..
அவர்கள் சார்ந்த மதத்தை பற்றியும் வெறுப்பாகவே ஆகும் இதை தான் மதனும் விரும்பினார்...
உண்மையில் முகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகத்தை நான் பரிந்துரை செய்கிறேன்..
ஆசிரியர் டி கே இரவீந்திரன் எழுதிய புத்தகம் இது..
விவேகி ,கொல்லம், பவித்ரேயன் போன்ற பல புனை பெயரில் அழைக்கப்பட்ட ஆசிரியர் இரவீந்திரன் முழுமையாக ஆய்விட்டு எழுதியுள்ளார் ..
இரண்டு பேருமே ஒரே வரலாற்றை தான் எழுதுகிறார்கள் ஆனால் திரிக்கப்பட்ட செய்திகள் வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலில் மட்டுமே வருகிறதே எப்படி ?
நிகழ் காலத்திலையே வரலாற்றை இப்படி மாற்றி எழுதும் பொழுது அன்றைய காலகட்டத்தில் சொல்லவா வேண்டும்..
கிறிஸ்துவத்தை எடுத்து விட்டு இந்தியாவை காண முடியாது வீரமா முனிவரை எடுத்துவிட்டு தமிழ் இலக்கணமான லகர எழுத்தை காண முடியாது ..
இஸ்லாமியராக தொலமியை எடுத்து விட்டு இந்தியா முதற்கொண்டு தமிழகத்தின் அடையாளத்தை காண முடியாது.
இவர்கள் மட்டுமல்ல இவர்களும் என்பதே எனது வாதம்..
வேதாந்தி, கிருத்துவம், இஸ்லாம், கடவுள் மறுப்பு கொள்கையுடையவர் இன்னும் பல மதங்கள் இவர்களை அனைவரையும் உள்ளடக்கியதே இந்தியா இதனை கொச்சை படுத்த வேண்டாமே...