மனிதக்கறியை வாணிபம் செய்யக்கூடிய மக்களும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கோ மக்கள் பழங்கால வழக்கத்தில் மரணித்தவுடன் அடக்கம் செய்யாமல் அவர்களை விற்றுவிடுவார்கள் என்ற குறிப்பும் உள்ளது.
அதே காங்கோவில் பெண்கள் குழந்தைகள் என மனிதக்கறிக்காக உயிருடன் விற்ற சந்தைகளும் இருந்தனவாம்.
சாலமோன் தீவில் மனித இறைச்சிக்காக பெண்களை நன்றாக உண்ணவைத்து உடலில் சதையை ஏற்றி பின்னர் ஒரு நாள் அறுத்து உண்பார்கள் என்ற கொடூர வரலாறும் உண்டு.
தாகித்தி எனும் தீவில் போலினீஸிய என்ற இனக்குழு வாழ்ந்தது...
அவர்களது குறிப்பில்...
வெள்ளை மனிதனின் பொரித்த இறைச்சி வாழைப்பழ துண்டு போன்று மிருதுவாக இருக்கும் என்று குறிப்பு உள்ளது.
பிஜி தீவில் வாழும் சிலர் கூறியது இங்கு வரும் கப்பல் மாலுமிகளை நாங்கள் சாப்பிடுவோம் அவர்கள் வெள்ளை நிறத்தவராக இருத்தால் அவர்களது சதை உப்புக்கரிக்கும் எனவும் கூறியுள்ளனர்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.