05/11/2020

பொய்...

 


நம் அனைவருக்கும் கற்பனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு, பொய் சொல்வது தான்.

பொய் சொல்பவன் தன கற்பனையைப் பயன் படுத்தத் துவங்குகிறான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் மனம் கற்பனையான நிகழ்வை உருவாக்குகிறது.

பொய்யின் வெற்றியே அதன் உடனடித் தன்மை தான். பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே.

ஒத்திகை பார்த்து சொல்லப்படும் பொய்கள் பெரும்பாலும் இளித்து விடுகின்றன. உண்மை வெளியாகப் பல காலம் தேவைப்படுகிறது.

பொய் எப்போதும் நம் நாக்கின் நுனியில் காத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள் பொய். இதில் மொழி, தேசம், உயர்ந்தவர், தாழ்ந்தவர், வயது என்ற பேதம் இல்லை.

பொய் என்பது ஒரு ருசி. அது இளம் வயதில் நமக்கு அறிமுகமாகிறது.

பொய்யை மெய்யில் இருந்து  வேறு படுத்திப் பார்க்க முடியாத வயது என்பதால் பொய்யை அப்படியே நம்பி விடுகிறோம்.

அது பொய் என்ற விபரம் தெரிந்ததும், நாமும் அசை ஆசையாய் பொய்களை உருவாக்கத் துவங்குகிறோம்.

நாம் வளர வளர பொய்களும் நம்மோடு வளர்கின்றன. பொய்யை உண்டாக்கவும், உபயோகிக்கவும் தெரிந்தவுடன் அதன் பெயரை திறமை, சாதுரியம், தொழில் தர்மம் என்று பொலிவுடன் கூறுகிறோம்.

பொய் சொல்லத் தயங்காத நாம் மற்றவர்களால் பொய் சொல்லி ஏமாற்றப்படும் போது மட்டும் ஏன் கோபப்படுகிறோம்?

எல்லாப் பொய்களும் ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறது.

பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் வாழ்வு சுவாரஸ்யம்  இன்றிப் போகுமோ?

அற்பப் பொய்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.

வரலாறு பதிவில் உள்ள பொய்கள், மதத்தின் பேரால் சொல்லப்பட்ட பொய்கள், வணிக நிறுவனங்கள் சொல்லும் பொய்கள், அரசு சொலும் பொய்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அங்கீகரிக்கப் படுகின்றன.

பொய்யைத் தவிர்ப்பது இயலாது.

ஆனால் பொய் சொல்ல வேண்டிய வாய்ப்புகளை குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது.

பொய்யைப் பொய் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.