28/11/2020

பெரியார் எனும் கன்னட பலிஜா தெலுங்கர் ஈ.வெ.ரா வும் திருட்டு திராவிட பகுத்தறிவும்...

ஈ.வெ.ரா நேர்மையான இறை மறுப்பாளரா?

நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 )..

ஆனால் ஈ.வெ.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.

அந்த முதல் இதழில், இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வெ.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.

இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.

நன்றி - முதல் குடியரசு.. சில பிரச்சனைகள், விமர்சனங்கள். ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.