28/11/2020

மனித மாமிசம் உண்ணும் மனிதர்களும் தமிழர்களும்...

 


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு தீவு இருந்ததாக வரலாறு உண்டு.. அந்த தீவுக்கு பெயர் மணிப்பல்லவம்...

இங்கு நக்கசாரனர் என்ற பெயருடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் இந்த நக்கசாரனர்என்பதற்கு அர்த்தம் மனிதனை உண்ணுபவர்கள் என்று அர்த்தம்..

ஆம் இவர்கள் கேனிபலிசம் என்று அழைக்கப்படும் மனித மாமிசத்தை உண்ணுபவர்கள்...

இந்த மனித மாமிசத்தை உண்ணும் தீவான மணிப்பல்லவம் தீவுக்கு அருகே சாவகம் என்ற பகுதி இருந்த்தாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதன் தலைநகரம் நாகபுரம் என்றும் குறுப்பிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சாவகம் என்ற தீவில் பேசிய மொழி தமிழ் தான்...

நாடுகாண் பயனியான தொலமி சபதாய் தீவு என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது சாவகத்தை சபதாய் என்று குறித்துள்ளார் .

நாம்  ஜாவா தீவு என்றும் சுமத்ரா தீவு என்றும் கேள்விப்பட்டுள்ளோம் அல்லவா அந்த தீவு தான் இந்த சாவகம் தீவு.

ஆகவே  ஜாவா சுமத்ரா பகுதியில் தமிழ் மக்கள் ஆரம்பகாலத்தில் இருந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை.

மேலே குறிப்பிட்ட மணிபல்லவம் தீவில் நக்கசாரனர் என்ற மனிதனை உண்ணும் மனிதர்கள் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை...

ஆனால் இந்த சாவகம் தீவில் வாழ்ந்த நாகபுரத்து மக்கள் நேரடியாக தமிழகம் வந்தார்கள் என்ற வரலாறு உள்ளது..

இவர்கள் தமிழகத்தில் வந்து சேர்ந்த ஊர் பதிரிதிட்டா என்ற ஊர்.

தமிழகத்தில் உள்ள பதரி திட்டா என்ற ஊருக்கு இந்த நாகர்கள் வந்ததால் நாகர்களின் பட்டினம் ஆனது.

ஆம் இன்றைய நாகப்பட்டினம் என்றழைக்கப்படும் ஊர் தான்...

ஆகவே தமிழர்கள் மனித மாமிசம் உண்ணக்கூடிய மனிதர்களையும் சமாளித்துள்ளார்கள் என்பதாக தெரிகிறது..

குறிப்பு : மணிப்பல்லவத்தை நைனா தீவு என்றும் ஒரு கருத்து உள்ளது..

இந்த தீவு இன்றும் இலங்கையில் உள்ளது.

ஆனால் இந்த தீவுக்கும் மணிப் பல்லவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாக பல செய்திகள் கிடைக்கிறது.

அதனால் எனது ஆய்வின் அடிப்படையில் உறுதியாக கூற முடியாது.

ஒரு வேலை நைநா தீவாகவும் இருக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.