06/11/2020

ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்...

 


ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு...

இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது..

இந்துத்துவா என்றால் என்ன?

இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  அது ஆரிய வாழ்க்கை முறையாகும்.

ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?

1. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்.

2.  ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர்.

3.  ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டவர் மற்றவர்கள்.

4. ஆரியர்களை எதிர்க்கும் மற்றவர்கள் ஆரியரின் எதிரிகள் அல்லது தீண்டத்தகாதவர்கள். 

என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறைதான் ஆரிய வாழ்க்கை முறையாகும். 

இதையே மனுநூல் வலியுறுத்துகிறது.

மனுநூலின் இக்கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த பெயர் தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும்.

ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த

1. பாரசீகர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு).

2. கிரேக்கர்  (கி.மு. நான்காம் நூற்றாண்டு).

3. சகர் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு).

4. குசானர் (கி.பி. முதல் நூற்றாண்டு).

5. ஊணர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

ஆகியோரும் வணிகத்திற்காக வந்த

6. உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

ஆகிய ஆறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில் ஒன்றிணைந்தனர். 

இவர்கள் தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாதவர்கள் ஆவர். 

ஆரியர் என்பது எந்த ஓர் இனத்தின் பெயரும் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.